புதன், 11 பிப்ரவரி, 2015





















எப்போதும் பொழிகின்ற மழையாயிரு.


உலரா கேசத்தின்
இயற்கை வாசத்தில்
ஸ்பரிசத்தின் ஈரலிப்புடன்
எனது காலையை எழுப்பிவிடுகிறாய்

சுவை ரசம் அடங்கிய
சூடான ஒரு கோப்பை தேனீருடன்
குரல்வழி தாவி
என் செவி ஏகி விடுகிறது
குளிர் பொதிந்த மென்மையான
உன் இனிமையின் அழைப்பு

இதங்களின் விரல்கள் ரிதங்களை மீட்ட
போர்வை விலக
சூரிய தரிசனம்

பல்லின பட்சிகளின் பாடு பொருளுடன்
ஒரு மழைக்கால ஒத்திகையேந்தி
மன வெளியில் தொடக்கிவைக்கப் படுகிறது
இன்றின் வைகறை இன்புற

அது புலர்வில் முளைத்து
மாலை,பின்னிரவு தாண்டியும்
ஆச்சரியங்களால் பூச்சொரிகின்றன



சந்தோஷசத்தின் பூர்வீகம்
வாழ்க்கையின் அழகை
ஆளங்களால் அடையாளப் படுத்த
உனதன்பின் ஒவ்வொரு துளியும் சேர
நிரம்பி வழிகிறது என் புலம்


பாசத்தின் பன்பலைகளில்
அரவணைப்பின் அனுசரணையுடன்
நகர்ந்து செல்லும் நாளிலெல்லாம்  
உன்னிடமிருந்து......,
கையேந்துவதும், மடியேந்துவதும்
இது ஒன்றைத்தான் உயிரே

மகிழ்ச்சி ததும்ப சுளித்து விளையாட
நீ வளர்த்த மீன்களுடன் சேர்ந்து
என் குளம் வற்றிவிடும் படி
என்றைக்கும் கோடையாகி விடாதே.