பிஞ்சு
அரும்புகளின் உயிர் பிய்த்து
குருதியில்
குளிப்பாட்டி கபனிடுகின்றன
இஸ்ரேலிய ஈனப் பிசாசுகள்
காஸாவில் உதிரும்
உயிர்களுக்கு பகர
கண்ணீர்
துளிக்குக்கூட
கஞ்சத்தனம்
பார்க்கும்
பல..
கல்புகள்(கல்ப் கன்றிகள்)
தற்காப்புக்காக உலக
சண்டியனை
தலையணைக்கடியில்
வைத்து
வணங்குபவர்களே இது கேளும்.....,
மௌனித்த படி
நீங்கள் இன்னும்
ஊமையாக உலவினால்
எதிர்காலத்தில்
உங்கள்
எண்ணை கிணறுகளில்
இரத்தம் வடித்து
ஏற்றுமதி
செய்யவரும்
யூதர்களின் யுத்த
வெறியை
நித்தம்
நினைக்கையில்
நாளங்கள் வெடித்து கொப்பளிக்க
இதயத்தை நனைத்து
விடுகிறது
இரத்தத்தின் ஈரம்
இங்கே
பாசிச
புடையாங்களின் பல்லை பிடுங்க
வக்கின்றிப்போய்
வழி புரியாமல்
ஐ.நா வாய்பொத்தி
சாரைகளுக்கு
சமாதானம் சொல்கிறது
பூமி பிடிக்கும்
நோக்கோடு
வசிப்பவனுக்கு
புதை குழி
தோண்டுபவனே
மனிதம் அழிந்த போன பின்
எதுக்குடா இந்த
மண்?