வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

  


பொங்கல் கவிதை போட்டி 2015” எழுத்து தளத்தில்.


(ஆறுதல் பரிசு வென்ற எனது படைப்பு.)


இப்படி நாம் காதலிப்போம்.



கோபுரத்து கலசமென குவலயத்தின் விலாசமென
அன்னாந்து ஊர் பார்க்க ஆளாக்கி உயர்த்தியோரை
கண்ணாக நாம் மதித்து கண்ணியம் காக்கையிலே
புண்ணிய வாழ்வாகி போகாதோ நம் வாழ்வு?

எண்ணிய படி வாழ்வு ஈடேற்றம் கண்டுவிட
அந்நியர் ஆக்காது உறவுகளை வென்றுநட-என்று

இந்நாளில் சிறப்பித்து இதயத்தால் மகிழ்வித்து
இப்படி நாம் காதலிபோம் இன்புற தான் ஆதரிப்போம்

சாதி,நிறம் என்னும் சர்சையுள்ள வாதங்கள்
பாதிப்பை ஏற்படுத்தும் பகட்டு வேதங்கள்-மனதால்
ஓதி ஒழுகாமல் உண்மைக்கு தோள் கொடுப்போம்
நீதி வழுவாமல் நேர்மைக்கு வாளெடுப்போம்

கூட்டுக் குடும்பமென குதூகலிப்பில் வாழுகிற
பாட்டுக்கு ஈடாக பாரிலுண்டா ஒரு வாழ்வு?
மனைக்கு ஒருத்தியினை நல்லாளாய்-பெற்றோர்
மனசின் விருப்புணர்ந்து நடக்க உள்ளளாய்

மனையாளாய் அழைத்து வந்து மகிழ்வு ஒளியேற்றி
வினையாளாய் திழைத்து விசித்திரங்கள் படைத்து
இல்லம் துலங்க வைத்து நல்லன்பு மிகைத்தோங்க
இணைப்பு வாழ்வின் பால் இப்படி நாம் காதலிபோம்

கற்கும் வயதினிலே காதலெனும் மாயையிலே
வீழ்ந்து மனமுருகி வெதும்பி வாழாமல்
மணமான பின்னாடி மனைவியரை காதலிப்போம்
உருவான தாய் மண்ணை உயிராக நாம் மதிப்போம்.