சனி, 17 மே, 2014

மண்ணின் மைந்தனுக்கு மகிழ்வு விழா-2014

புகைப்படம்.

மண்ணின் மைந்தனுக்கு மகிழ்வு விழா-2014





எனது மைத்துனர் Dr U.L.BZEER(MBBS) அவர்களுக்கு அவர் பிறந்து வளர்ந்த கிராமமான இறக்காமம்,வாங்காமம் வாழ் மக்கள் சார்பாக பாராட்டு விழா நடாத்தி கௌரவித்து கையளித்த நினைவுச்சின்னம். 

மண் பற்று.



அமாவாசை இருளிலிருந்தும்
விடிவெள்ளி ஒன்றிலிருந்துதான்
உனது பொழுது புலர்ந்திருக்கும்

மடிதாவி மண் தொட்டதை மறந்து
நம்பத்தகாதபடி பெருமிதத்தோடு
வானிலிருந்து குதித்தவனாய்
அடி,நுணி அறியாமல்
ஆடுபவனே அறி
அணிய ஒரு கச்சை தந்தது
உனக்கு பூமி இட்ட பிச்சை
கொச்சைப் படுத்தாதே

மண்ணுக்கு மரியாதை செய்வதாய்
கோயில் கட்டி
கும்பிடாதிருந்தாலும் பரவாயில்லை
சாதிப் பெயர் வைத்து சாமியாடாதிரு
மண் மரத்தை வளர்ப்பதில்
எடுக்கும் சிரத்தை
மனிதன் காட்டுவதில்லை
மனிதன் மீதேனும்
தனக்கு தேவையற்ற ஒன்றின் மீது
சேவையாற்றுகிற
மண்ணை படிக்காத நீ மனிதனா

வானத்தின் விசாலத்தை
ஞாயிறின் கவர்ச்சியை
செவ்வாயின் குளிர்ச்சியை
ஆண்டாண்டாய் அனுபவிக்கிறாய்
பூமியின் எழுழ்ச்சியை பற்றி
எப்போதாவது எண்ணியதுண்டா?

ஊரை கொள்ளையடிப்பதிலும்
சுவரை வெள்ளையடிப்பதிலும்
காலத்தை கரைப்பவனே
ஏடு எடு பூமியில் நீ
விதையாய் விழுந்த
புதினத்தை புரியும்படி
இனியாகிலும் எழுதி வை
மண் உன் தாயையும் ஏந்தியதாய்
சந்திப்பும்,பிரிவும்
ஒரு முனையில் என உணர்த்து
உன் வாரிசாவது படித்து

மண்ணுக்கு மரியாதை செய்யட்டும்.