வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

எனது நிலை!



 கடைமைக்காக
இணைந்து பிரியும் கணவன்,
பெற்றதற்காக
பணிகள் எதிர்பார்க்கும் பிள்ளைகள்

குதர்க்கமாக பேசி நாளும்
வார்த்தையால் குதறியபடி
கூட இருக்கும் அத்தை

வரதட்சனை பாக்கியை
ஞாபக மூட்டி நகைக்கும் மாமா

"ஏண்டி வந்த"என்ற கேள்வியோடு
தாமதிக்க விடாமல் விரட்டும்
தாய் வீடு

அனைத்தையும் தாண்டி
..............................................,
தினமும்
அணையாமல் கனன்றுகொண்டிருக்கும்
அடுப்பங்கரையில்
வறுபடுகிறது என் வாழ்க்கை.

2 கருத்துகள்:

  1. எழுத்து சூறாவளி05-August-12 5:15 PM
    இன்றும் பல பெண்கள், இதுபோன்றவேதனைகளில் ஒன்றையாவது அனுபவிக்கிறார்கள்..

    நாம் மாறுவோம், நிலை மாறும்..

    பதிலளிநீக்கு

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.