வெள்ளி, 9 மே, 2014

வித்தகர்களுக்கு விழா எடுப்போம்.




















உழைப்பின் உபாயத்தை
வார்த்தைகளுக்குள் வெறுமனே
வடித்துவிட முடியாது
அது வரலாற்றை புரட்டிய வரலாறு
வணிகத்தை திரட்டிய பொருள் கூறு
*************
உழைப்பால் மட்டுமே உயர்வென்று
உலகுக்கு உணர்த்தும்
உடன் பிறப்புகளே,
மூதாதை முதிசங்களே
மண்ணின் கருப்பையிலிருந்து
புதையல் எடுத்து
விண்ணில் பரப்பும் வித்தை
உங்களால் உலகில் சாத்தியம்
ஆச்சரியமே ஆச்சரியப்படும் அதிசயம்
நீங்கள் என்றால் நிகர் ஏது?
*************
நிலமென்றால் நீங்கள் பயிர்
பாறையையும் பூக்கவைக்கும்
பக்குவம் தெரிந்ததால்
நெருப்பென்றால் நீங்கள் உலை
உருகி உருமாறும்
உக்தி அறிந்ததால்
நீரென்றால் நீங்கள் கடல்
ஆரவாரமற்ற ஆளுமை
சமுத்திரமாய் உள்ளே ஒளிந்திருப்பதால்
காற்றென்றால் நீங்கள் புயல்
எல்லைகளை கடந்தும்
தேசத்தின் தேவைக்காய்
அசையும் ஆற்றலில்....ஆளுமை உள்ளதால்
காடென்றால் நீங்கள் விருட்ஷம்
பட்சிகளுக்கு கிளை,
பாதசாரிகளுக்கு நிழல்
பசுமைக்கு விருந்து
*************
இத்தனையும் பெற்று வித்தகர்களாய்
பரந்து உலகெங்கும் நிறைந்து இருக்கும்
பாட்டாளி வர்க்கத்தை கூட்டாளியாக்கி
பரிசளித்து கௌரவிப்போம்
எதிர்வரும் மே தினம் மேன்மையுற.
*************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.