காயத்தை தருவதிலே
உந்தன் பங்கு
கனிசமாய் ஆனதனால் நானோ நொந்து
மாயத்தை
விளங்காமல் அனுதினமும்
மன்றாடி
தோற்கின்றேன் உந்தன் முன்பு
பேசாமல் வார்த்தை
யொன்றை இதழ்களிடை
பிசைகின்ற
படிமத்தை சொல்வதென்றால்
நாளொன்று போதாது
ஆரணங்கே-உன்
நளினத்தில்
பதிலின்றி திரும்புகின்றேன்
சாமத்து கனவுகளில்
அருகில் வந்து
சரிபாதி நானென்று
பீத்துகின்றாய்
நாயத்தை
கேற்கின்றேன் சொல்லாமல் நீ
நழுவி தான்
போகின்றாய் நியாயம் தானா?
பாவத்தை செய்து
விட்ட பரம்பரைக்கு
பழிதீர்க்க
வேண்டுமென்ற எண்ணத்தோடா
கோபத்தை கண்களிலே
கொப்பளித்து
கொல்கின்றாய்
பெண்ணே இது பாவம் தானே?
மோகத்தில் உன்
பின்னே பருவ காலம்
முடிவின்றி
போயிற்று என்பதாலே
விடிவின்றி
யாக்காது எந்தன் வாழ்வை
விடை கூறி,இணையாகி வாழ வா நீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.