புதன், 22 ஏப்ரல், 2015

தவற விட்டவைகள்.


தூரத்தில் நின்ற துயில்கருவறையில் வைத்து விட்டு
“கபுறறைக்கு”(கல்லறைக்கு) போன வாப்பா
தவழ்ந்து புரண்டு
தாவி உறங்கிய தாய்மடி
பாலியம் காணாமல் பாடையேறிய
பள்ளித்தோழி
இடம்மாற்றம் கிடைத்த பின்
இதுவரை சந்தியா ஆரம்ப ஆசான்
பட்டினியாய் படுத்த இரவுகளில்
அருகிருந்து அனுபவிக்க கிடைக்காத
என் குழந்தைகளின் குறும்பு
நனைய காத்திருந்த மழை
பொழியாமல் போன தருணம்
நகரப் பேரூந்து பயணத்தில்
என் மணிபர்சுடன் இறங்கிப் போன
பக்கத்து இருக்கை பயணி
அநாதரவாக நின்றபோது
ஆதரித்த முன் அனுபவம் அற்ற முகம்
வாழ்கை என்று வந்தபின்
இறக்கை கட்டிப் பறந்த இருபது வருடங்கள்
இன்னும்......,
சேமிக்க முடியாமல் செலவுபோன
சில்லறைகள்
என் “கபுறறை”(கல்லறை) வரைக்கும் நீளும்
கவலை சிலுவைகளாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூவாய் முளைத்து வாசலாய் இருக்கிறேன்.
வந்து போங்கள் உங்கள் வாழ்த்துக்களோடு.